பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: வாய்மை / Veracity
குறள் 292:
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
விளக்கம் 1:
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: தெரிந்துவினையாடல் / Selection and Employment
குறள் 517:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
விளக்கம் 1:
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
**************************************
1. Charity begins at home
தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும்.
2. Ask and it shall beMake hay while the sun shines (or)
Strike while the iron is hot
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
4. A face is the index if the mind
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
5. As is the king so are the subjects
அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்.
6.Too much of anything is good for nothing
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்.
7.Friend in need is a friend indeed
ஆபத்துக்கு உதவும் நண்பனே உண்மையான நண்பன்.
8. All are not saints that go to church
வெளுத்ததெல்லாம் பாலாகுமா?
9. A honey tongue, a heart of gall
படிப்பது இராமாயணம் இடிப்பது சிவன்கோயில்.
10. Love is blind
ஆசை வெட்கம் அறியாது.
11. Look before you leap
ஆழமறியாமல் காலை விடாதே.
12. Birds of the same feather flock together
இனம் இனத்தைச் சேரும்.
13. Do in Rome as Romans do
ஊரோடு ஒத்து வாழ்.
14. Union is strength
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
15. East or west, Home is best
எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.
16. Art is long but life is short
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
17. Cut your coat according to the cloth
வரவிற்கு ஏற்ற செலவு செய்.
18. Barking dogs seldom bite
குரைக்கிற நாய் கடிக்காது.
19. Deep rivers move in silence; Shallow brooks are noisy
குறை குடம் தளம்பும் ; நிறைகுடம் தளம்பாது.
20. You can’t have the cake and eat it too
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
21. Many a slip between the cup and the lip
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
22. Man purposes, God disposes
தான் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது.
23. Health is wealth
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
24. Haste makes wast
பதறிய காரியம் சிதறிப்போகும்.
25. An old thief is one day caught
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.
26. Constant use even milk taste sour
பழகப் பழக பாலும் புளிக்கும்.
27. Knowledge is power
புத்திமான் பலவான் ஆவான்.
28. Clam before storm
புலி பதுங்குவது பாய்வதற்கே.
29. All that glitters in not gold
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
30. Prevention is better than cure
வெள்ளம் வருமுன் அணை போட வேண்டும்.
31. All are not saints that go to church
வெளுத்ததெல்லாம் பாலாகுமா?
32. As you sow so shall you reap
வினை விதைப்பவன் வினை அறுப்பான்.
33. It is no use building castles in the air
மனக்கோட்டை கட்டாதே.
34. One lie leads to another
பொய்க்கு எல்லையே இல்லை.
*************************************
தடைதனை உடைத்திடுவோம்
ஒரு விடைதனை அடைந்திடுவோம்
மடைதனை உடைத்திடுவோம்
ஒரு ஆற்றுவெள்ளம் போல் புறப்படுவோம்
இனி ஒரு விதி செய்வோம்
புயலாய் சென்று
பகைதனை வென்று
சுயம்தனை காத்து நின்றிடவே
இனி ஒரு விதி செய்வோம்
ஒன்றாய் சேர்ந்திடு
உறுதியை பூண்டிடு
எதிர்படும் அனைவரும் அலர்ந்திடவே
இனி ஒரு விதி செய்வோம்
மரணமோ ஜனனமோ
இது எழுந்திடும் திருணமோ
ஒரு விடியலும் இங்கே புலர்ந்திடவே
இனி ஒரு விதி செய்வோம்
மனதினில் புழுகி
மண் தனில் அழுகி
மாண்டிடும் மானிடம் தழைத்திடவே
இனி ஒரு விதி செய்வோம்
ஏழையை வளர்க்க
ஏளனம் தடுக்க
எரிமலை போலே எழுந்திடவே
இனி ஒரு விதி செய்வோம்
வாட்டும் வலிதனை
காட்டும் நபரினை
காட்டு தீ போலே எரித்திடவே
இனி ஒரு விதி செய்வோம்
மாற்றம் வரும் என
பார்க்கும் நபர் வலி
விரைவாய் சேர்ந்து தீர்த்திடவே
இனி ஒரு விதி செய்வோம்
எவர்கை தடுக்கும் லஞ்ச
காக்கைகள் பறக்கும்
சினம் கொண்ட சிறுத்தையாய் சீறிடுவோம்
இனி ஒரு விதி செய்வோம்.
*********************************